மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே அரசை நிர்வகிக்க வேண்டும்


மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் அரசை நிர்வகிப்பதே ஒரு நாட்டினது சிறந்த ஆட்சியாளர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பொசன் பௌர்ணமி தினச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் குற்றங்களை ஒடுக்குவது, நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைவது, மதக் கோட்பாடுகளுடன் நாட்டை ஆள்வது ஆகியவை பௌத்த அரசியல் தத்துவத்தில் ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.

இவற்றினை ஒரு ஆட்சியாளர் கொண்டிருக்க வேண்டும் என்று பௌத்தம் குறிப்பிடுகிறது. அதெல்லாம் நம் நாட்டுக்கு மஹிந்த தேரரின் வருகையினால் கிடைக்கப் பெற்றதாகும்.

மஹிந்த தேரர் நாட்டிற்கு வந்து பௌத்தத்தை அறிமுகப்படுத்திய போது இலங்கை வரலாறு ஒரு முழுமையான புரட்சிக்கு உட்பட்டது.

பஞ்சசீலத்தினால் போதிக்கப்பட்ட அகிம்சையையே தங்கள் வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தை வளப்படுத்தினார்கள்.

மஹிந்த தேரரின் வருகையானது இலங்கையின் பௌத்தத்தின் ஆரம்பத்தை மட்டுமன்றி, எமது நாட்டின் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய கலாச்சாரத்தின் அறிமுகத்தையும் குறிக்கும் ஒரு சந்தர்ப்பமாக கருதலாம்.

அதன் மூலம் அதுவரை இருந்த நம்பிக்கையை விட அர்த்தமுள்ள கலாச்சாரத்தை மரபுரிமையாக பெற அடித்தளம் அமைக்கப்பட்டது.

பௌத்தம் கட்டியெழுப்பிய மாபெரும் கலாசாரம் எமது தாய்நாடு முழுவதும் பரவி கிராமங்கள் தோறும் பரவியதுடன், ஏனைய மதங்கள் மற்றும் உப கலாச்சாரங்களுக்கு ஆதரவான தன்மை கொண்ட பௌத்த நடைமுறை நல்லிணக்கத்திற்கும் சகவாழ்விற்கும் அடிப்படையாக அமைந்தது.

ஒரு சிறந்த தர்மத்தின் அரவணைப்பால் போஷிக்கப்பட்ட நாட்டில், பொசன் விடியலைக் கொண்டாடும் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் புனித பொசன் பௌர்ணமி தினமாக அமையட்டும் என அவர் தனது பொசன் பௌர்ணமி தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments