யாழ். அச்சுவேலிப் பகுதியில் வர்த்தக நிலையமொன்று தீ வைப்பு!


யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றையதினம் சனிக்கிழமை வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் தீப்பரவலால் வர்த்தக நிலையம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்துக்கு விஷமிகள சிலர் தீ வைத்திருக்கலாமென வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments