வவுனியாவில் டிப்பர் மோதி தாயும் மகனும் உயிரிழப்பு
பேருந்துக்கு காத்திருந்த தாயும் மகனும் டிப்பர் வாகனம் மோதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
வவுனியா மன்னர் வீதியில், கன்னாட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்துக்காக , பேருந்து நிலையத்தில் தாயும் அவருடைய 5 வயது மகனும் காத்திருந்தனர். அதன் போது வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் தாய் மற்றும் மகன் சம்பவம் இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment