15 பில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் அழிப்பு


15 பில்லியன் ரூபாய் பெறுமதியான 200 மில்லியன் சட்டவிரோதமான சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டியவில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினால் கைபற்றப்பட்ட குறித்த தொகை சிகரெட்டுக்களே இன்று அழிக்கப்பட்டதாகவும் ,இதனால் அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டதாகவும் சுங்கத் திணைக்களத்தினருக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும், குறித்த சிகரெட்டுகளை விற்க முடியாததோடு இவற்றின் தரத்திற்கு எந்தப் பொறுப்பும் கூறமுடியாது எனவும் தெரிவித்தார். 

No comments