ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்-பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணிநீக்கம்


ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்துப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, ஒழுக்காற்று மீறல்கள் தொடர்பாக 12 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments