வலைப்பந்தாட்ட போட்டியில் வைத்தியர்கள் அணி வெற்றி


வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற  வலைப்பந்தாட்ட போட்டியில் வைத்தியர்கள் அணி வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் , வைத்தியர்கள் அணி 34 புள்ளிகளையும், சட்டத்தரணிகள் அணி 8 புள்ளிகளையும் பெற்றதன் அடிப்படையில் வைத்தியர்கள் அணி வெற்றி பெற்றது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டி யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டது.

போட்டியில் விருந்தினர்களாக நீதிபதிகள், வைத்திய நிபுணர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments