இந்தியப் பெருங்கடலிலுள்ள மயோட் தீவில் உள்ள குடியேற்றங்களை அழிக்கும் பிரெஞ்சு அதிகாரிகள்


பிரஞ்சு நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட கடல் கடந்த நிலப்பாக இருக்கும் மயோட் தீவில் தரக்குரைவான வீடுகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளை நியமித்துள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மயோட் தீவு மடகாஸ்கர் நாட்டுக்கும் கொமரோஸ் தீவுக்கும் இடையில் காணப்படுமு் ஒரு தீவு ஆகும். இது இந்து சமுத்திரத்தில் உள்ளது.

திங்கட்கிழமை அதிகாலையில், மேயோட்டில் உள்ள தாலுஸ் 2 சேரியில் உள்ள தகரக்கூரைகளால் அமையப்பெற்ற வீடுகளை தகர்த்து அகற்றும் ஒபரேஷன் வும்புஷு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வீடுகள் அழிக்கப்படுவதற்கு முன்னர் வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. வீடுகளுக்குள் யாரும் இருக்கிறார்களா என்பதை சரிபார்க்க ஜென்டார்ம் காவல்துறையினர் நுழைந்தனர்.

இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக காரணம் தரமற்ற சட்டவிரோத வீட்டுமனைகளை அகற்றுவது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதும் ஆகும்.

அங்கு வசிக்கும் பாத்திமா யூசுஃப் இந்த நடடிவக்கை குறித்து கூறுகையில்:

நான் 2001 முதல் வேலை செய்து வருகிறேன், இப்போது வரை நான் வேலையை நிறுத்தவில்லை. னது ஏழு குழந்தைகளை வளர்க்க இந்த உலகில் கடினமாக உழைக்கும் பெண்களில் நானும் ஒருவன். மற்றவர்களைப் போலவே நானும் உழைத்து பங்களிக்கிறேன். நான் என் வரியைச் செலுத்துகிறேன். எனக்குத் தெரியாது நான் இன்று வெளியே அழைத்துச் செல்லப்படுகிறேன். மற்றவர்களைப் போலவே நானும் பங்களிக்கிறேன் என்றார்.

இந்த நடவடிக்கை வாரம் முழுவதும் நீடிக்கும் என, சட்டவிரோத வீடுகளைக் குறைப்பதற்கான உள்ளூர் அதிகாரி சைல்வியா தேவாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மயோட்டில் 1,000 தரமற்ற வீடுகள் அழிக்கப்படவுள்ளது. மேலும் 135 குடியிருப்புகள் அகற்றப்படவுள்ளது.

வீடுகளை அழிக்கும் திட்டம் ஏப்ரல் 25 ஆம் நாள் நடைபெறவிருந்தது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பால் இடைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த இரண்டு அடுத்தடுத்த சட்டத் தீர்ப்புகள் வீடுகளை அழிக்க பிரெஞ்சு அரசை தொடர அனுமதித்தன.

புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை மீறும் ஒரு மிருகத்தனமான நடவடிக்கை என சங்கங்கள் கண்டித்துள்ளன. ஆனால் உள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் பல குடியிருப்பாளர்களும் அதை ஆதரித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் இளைஞர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே மாயோட்டில் மோதல்களைத் தூண்டியது மற்றும் அரசியல் பதட்டங்களைத் தூண்டியது.

பிரெஞ்சு தீவின் பெரும்பாலான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அண்டை தீவுக்கூட்டத்தில் இருந்து வந்தனர்.

மயோட்டின் மதிப்பிடப்பட்ட 350,000 குடியிருப்பாளர்களில் பாதி பேர் பிரெஞ்சுக் குடியுரிமைளைக் கொண்டிருக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments