ருவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமனம்


சமூக ஊடகமான ருவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை (Linda Yaccarino) வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என எலான் மஸ்க் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

லிண்டா யாக்காரினோ வணிகம், புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்புகளை கவனிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ருவிட்டரை மேற்பார்வையிடுதல், மென்பொருட்களைத் தயாரித்தல், தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாக எலான் மக்ஸின் பங்கு அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

யாக்காரினோ அமெரிக்க ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழுவான NBCUniversal இல் உலகளாவிய விளம்பரத்தின் தலைவராக இருந்தார்.

அவர் வெள்ளிக்கிழமை நிறுவனத்தை விட்டு வெளியேறினார். யாக்காரினோ ஊடக மற்றும் விளம்பர உலகில் பல வருட அனுபவத்தைக் கொண்டவர். அவர் NBCUniversal இல் கிட்டத்தட்ட 12 வருடங்கள் பணிபுரிந்தார்.

2011 ஆம் ஆண்டு முதல் $100 பில்லியன் (€92 பில்லியன்) விளம்பர விற்பனையில் அவரது குழுவுடன் செயற்பட்டவர்.

யாக்காரினோ முன்பு விளம்பரம் மற்றும் கிளையன்ட் கூட்டாண்மைக்கான NBC இன் தலைவராகவும், கேபிள் பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் விளம்பர விற்பனையின் தலைவராகவும் பணியாற்றினார்.

என்.பி.சி உடனான அவரது காலத்திற்கு முன்பு, யாக்கரினோ கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக உலகளாவிய பொழுதுபோக்கு நிறுவனமான டர்னரில் பணியாற்றினார்.

யாக்காரினோ கடந்த மாதம் மியாமியில் எலோன் மஸ்க்கை நூற்றுக்கணக்கான விளம்பரதாரர்கள் முன்னிலையில் செவ்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments