ஒரு வாரத்தில் மட்டும் இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் 6 மூத்த தளபதிகளைக் கொன்றது இஸ்ரேல்


காசாவில் நேற்று வெள்ளிக்கிழமை அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் போராளி அமைப்பாக இயங்கும் இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இச் செய்தியை இஸ்ரேல் பாதுகாப்பு படையின் பேச்சாளரும் உறுதி செய்துள்ளார்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் 6 முக்கிய தளபதிகள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இஸ்லாமிய ஜிஹாத் என்பது இஸ்ரேலால் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளாலும் பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது.

ஜெருசலேம் உட்பட இஸ்ரேலில் உள்ள நகரங்களை நோக்கி ரொக்கெட்டுகள் அலையாக வீசப்பட்டதைத் அடுத்து காஸாவில் இஸ்லாமிய ஜிஹாத் இலக்குகளைத் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.

இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் பாலஸ்தீனியப் படுகொலைகள், ஆக்கிமிப்புகளுக்கு ரொக்கெட் மூலம் இஸ்ரேலுக்கும் பதிலடி கொடுக்கும் அமைப்பாக இஸ்லாமிய ஜிஹாத் செயற்பட்டு வந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.


No comments