ரஷ்யாவிடம் இந்தியா கச்சாய் எண்ணெய் கொள்வனவு: 10 மடங்கால் அதிகரிப்பு: 4.55 பில்லியன் யூரோக்கள் மிச்சம்!!


ரஷ்யாவிடம் இருந்து கச்சாய் எண்ணெய்யை வாக்குவதை இந்தியா அதிகரித்துள்ளது என்பதை மேற்கு நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி கடந்த ஆண்டு பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக அதன் வங்கி ஒன்று தெரிவித்துள்ளது.

பாங்க் ஆஃப் பரோடாவின் புள்ளிவிவரங்கள் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பெருமளவில் அதிகரித்தது. இதேநேரம் மேற்கு நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதிகளைக் குறைத்துள்ளன.

இந்தியா இப்போது ரஷ்யாவிடமிருந்து கிட்டத்தட்ட 20% எண்ணெயைப் பெறுகிறது. இது 2021 இல் வெறும் 2% ஆக இருந்தது. தற்போது அது 10 மடங்கால் அதிகரித்துள்ளது.

சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கச்சாய் எண்ணெய்யை தள்ளுபடி விலையில் ரஷ்யா விற்கிறது. இந்தியா உலகத்தில் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்கமதியாளராக உள்ளது.

கடந்த நிதியாண்டில், ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சாய் எண்ணெய்யை இந்தியா வாக்கியதால் கிட்டத்தட்ட 4.55 பில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்தியது.

No comments