போலந்து - ரஷ்யா இடையே மேலும் பதற்றம்: கலினின்கிராட் நகரத்தை மறு பெயரிட்டது போலந்து!


ரஷ்யாவின் ஆளுகைக்குள் உட்பட்ட போலந்தின் எல்லையில் அமைந்துள்ள கலினின்கிராட்  நரகப்பகுதியை போலந்து மறுபெயரிட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள புவியியல் பெயர்கள் குறித்த அரசாங்கக் குழுவின் பரிந்துரையைப் பின்பற்றி, இனி இது போலந்து வரைபடங்களில் குரோளவியற் (Krolewiec) என குறிப்பிடப்படும்.

போலந்தின் இந்த நவடிக்கை ரஷ்யாவைக் கோபப்படுத்தியது. இந்த நடவடிக்கையை பைத்தியக்காரத்தனம் என்று ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அழைத்தார்.

முன்பு குரோளவியற் (Krolewiec) என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யேர்மனியிலிருந்து சோவியத் யூனியனிடம் ஒப்படைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டில், போல்ஷிவிக் புரட்சியின் தலைவர்களில் ஒருவரான மிகைல் கலினின் நினைவாக கலினின்கிராட் என்று பெயர் மாற்றப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் கலினின்கிராட் நகரத்திற்கும் போலந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, அதேசமயம் குரோளவியற்  என்ற பல நூற்றாண்டுகள் பழமையான பெயர் போலந்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

21,000 க்கும் மேற்பட்ட போலந்து போர்க் கைதிகளை தூக்கிலிட உத்தரவிட்ட ஆறு சோவியத் அதிகாரிகளில் கலினின் ஒருவர் என்பதையும் போலந்து அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

உக்ரைன் போர், ரஷ்யாவிற்கும் போலந்திற்கும் இடையே ஆழமான பதட்டங்களுக்கு புத்துயிர் அளித்துள்ளது. போலந்து உக்ரைனின் முக்கிய கூட்டாளியாக உருவெடுத்து. அதற்கு ஆயுதங்களை வழங்கி வருவதுடன் சர்வதேச ஆதரவை திரட்டியது.

No comments