நியூசிலாந்திது விடுதியில் தீ: 6 பேர் உயிரிழப்பு


நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் உள்ள தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளதாக பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இது ஒரு முழுமையான சோகம் என்று ஹிப்கின்ஸ் கூறினார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளனர்.

நேற்றிரவு இந்த விடுதியில் இருந்த அனைவரின் பட்டியலை நாங்கள் இன்னும் முழுமையாக சரிபார்க்க முடியவில்லை. எத்தனை பேர் இங்கே இருந்தார்கள், அவர்கள் எங்கு சென்றார்கள், என்பதை நாங்கள் ஊகிக்க முடியவில்லை என்று வெலிங்டன் காவல்துறையின் துணை கட்டளை அதிகாரி டியான் பென்னட் கூறினார்.


No comments