நாவாந்துறை சம்பவம்; மனநிலை பாதிக்கப்பட்டவராம்


யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் மனநிலை பாதிப்புக்கு உள்ளானர் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை, சிறுவர்களை கடத்தும் நோக்குடன், அப்பகுதியில் நடமாடினார் என ஒரு நபரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தினர்.

பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் , அந்நபர் மனநிலை பாதிக்கப்படவர் என தெரியவந்துள்ளது.

அதேவேளை குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவரது குடும்பத்தினரால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களால் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும், கடத்தல் முயற்சிகள் நடைபெற்றமையால், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.


No comments