ஸ்நேக் பாபுவும் உள்ளே சென்றார்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடாவடிகளில் ஈடுபட்டு வந்திருந்த ஸ்நேக் பாபு என்றழைக்கப்படும் மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புவியியல் திணைக்கள அதிகாரி ஒருவர் செய்த முறையீட்டின் பேரில், கைது அரங்கேறியுள்ளது.
சுமணரதன தேரரினால் நிர்மாணிக்கப்பட்ட குளம் ஒன்றுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டு, மட்டக்களப்பு புவியியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் மட்டக்களப்பு காவல்துறையிடம்; முறைப்பாடு செய்திருந்தார்.
அம்பிட்டியே சுமணரதன தேரர் சில ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு பன்சல்கல் ராஜமகா விகாரைக்கு அருகில் குளம் ஒன்றை நிர்மாணித்து, பிரதேச சிங்கள குடியேற்ற விவசாயிகளின் நெற்செய்கை மற்றும் நிலப்பயிர்ச் செய்கைக்கும், விகாரையின் செய்கை நடவடிக்கைகளுக்கும் நீர் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்நிலையில் புவியியல் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட குளத்தை சேதமாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த புவியியல் திணைக்களத்தின அதிகாரியை அலுவலகத்தினுள் புகுந்து மிரட்டியதாக மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் கைதாகியிருந்தார்.
அவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை செவ்வாய்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment