உலங்கு வானூர்தி விபத்து: 17 நாட்களின் பின் குழந்தை உட்பட சிறுவர்கள் உயிருடன் மீட்பு!


அமேசான் வனப்பகுதியில் சென்றபோது உலங்க வானூர்தி திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதிஷ்டவமாக 13 வயது, 9 வயது, 4 வயது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர். இவர்கள் அனைவரும் அர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர். அங்கு விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினார். ஆனால், குழந்தைகளின் நிலை என்ன? என தெரியாததால் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை தேடும் பணியில் 100 இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர். மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை, 3 சிறுவர்,சிறுமிகள் இன்று உயிருடன் மீட்கப்பட்டனர்.


No comments