உக்ரைனுக்கு போர் விமானங்களை எங்களால் வழங்க முடியாது - யேர்மனி


உக்ரைனுக்குப் போர் விமானங்களை அனுப்பும் சர்வதேச முயற்சியில் நாங்கள் சேரமாட்டோம் என யேர்மனி கூறியுள்ளது.

பிரித்தானியாவும், நெதர்லாந்தும்  உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களைப் பெற உதவும் திட்டங்களை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவித்தலை யேர்மனி வெளியிட்டுள்ளது.

ரஷ்யப் படைகளைத் தோற்கடிக்க F-16 போர் விமானங்கள் வேண்டும் என உக்ரைன் விடாப் பிடியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்குப் போர் விமானங்களை அனுப்பும் சர்வதேச முயற்சியில் நாங்கள் இணையமாட்டோம். எங்களால் செயலில் பங்கு வகிக்க முடியாது. எங்களிடம் ஏனென்றால் எங்களிடம் பயிற்சி திறன்களோ, திறமைகளோ அல்லது விமானங்களோ இல்லை ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறினார்.

போர் விமானங்களுக்குப் பதிலாக டாங்கிகள் மற்றும் வெடிமருந்துகள் போன்ற பிற வகையான இராணுவ உதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக யேர்மனி கூறியது.

No comments