பேசியது நீயா?சஜித்தே தான்!எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறாமல் தம்மை தக்க வைத்துக் கொள்ளுமாறு தனது மனைவி மற்றும் சகோதரரிடம் கூறிய குரல்பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவருடன் தான் ஒரு நாளோ இரண்டு நாளோ வேலை செய்ததால் அவரது அனுமதியின்றி குரல்பதிவுகளை வெளியிடத் தயாரில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் அனுமதி அளித்தால் குரல்பதிவுகளை வெளியிடத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரிசன் ஐக்கிய மக்கள் சக்தியில் ஈக்கில் என அக்கட்சி சார்பில் விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச தனது மனைவி மற்றும் சகோதரனுடன் பேசிய குரல்பதிவுகளை பகிரங்கப்படுத்தப்பட்டால் நாம் ஈக்கிலா தென்னை மரமா என்பதை புரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments