ரிஷி சுனாக் மற்றும் நரேந்திரமோடியைச் சந்தித்தார் ஜெலென்ஸ்கி


ஜி7 உச்சி மாநாட்டில் திடீரெனக் கலந்துகொள்ளச் சென்ற உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அங்கு ஜி7 நாடுகளின் தலைவர்களைத் தனித் தனியே சந்தித்துவருகிறார்.

முதலில் அவர் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனாக் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி  மற்றும் ஐரோப்பிய ஒன்றியதின் தலைவர் சாள்ஸ் மிகைல் ஆகியோரச் சந்தித்தார்.

உச்சிமாநாட்டில் மற்ற தலைவர்களைப் போலல்லாமல், உக்ரைன் மீதான மாஸ்கோ ஆக்கிரமிப்பு குறித்து மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை அதிகரித்தது.

இந்தியா ஜி7 இல் உறுப்பினராக இல்லாவிட்டாலும் ஜி7 அல்லாத நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களில் மோடியும் உள்ளார். அவர்கள் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) வின் உலகளாவிய தெற்குடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

No comments