ஊடகங்களை முடக்க முயற்சி:சஜித் குற்றச்சாட்டு!



ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒலிபரப்பு அதிகார சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிப்பது, நாட்டின் 220 இலட்சம் மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கும் போது அவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாகவும், மத்திய வங்கிச்சட்டம் போன்றே மக்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சட்டமூலங்களுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கு பதிலாக இலஞ்சம் பெறுவது போன்ற ஊழல் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தனித்துவமான மற்றும் பரஸ்பர சிந்தனைசார் கொள்கைப்போக்குகள் மற்றும் நிலைப்பாடுகளை கொண்டிருந்தாலும், தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் நிலவுவதால் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து குறிப்பிட்ட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கலந்துரையாடலை ஆரம்பிக்கும் போது, ​​அனைவரும் இதில் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாட்டின் ஜனநாயகத்தின் பிரதான தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகிய மூன்று ஒன்றிணைக்கும் மற்றுமொரு முக்கிய தூணாக விளங்கும் ஊடகங்களுக்கு நாடு இந்நேரத்தில் எதிர்கொண்டுள்ள பல பாரிய நெருக்கடிகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்புள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் இவ்வாறான மக்கள் சார்பற்ற வேலைத்திட்டத்தை தடுக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கும்போது, இது தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு நான்காவது ஆட்சியாளரான ஊடகங்களுக்கு உள்ளதாகவும், இவ்வாறான ஊழல் மோசடிகளை தடுத்து எமது நாட்டை உலகில் முதலாம் இடத்திற்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தில் விசேட பங்களிப்பை வழங்க ஊடகங்களுக்கு தனித்துவமான பொறுப்புகளும் பணிகளும் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments