இணக்கம் வந்ததே!மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் நாய்கடி பூனைகடி நிலையிலிருந்த தமிழ் தரப்புக்கள் தற்போது ஓரளவு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றிருந்தது.

அபிவிருத்திக் குழுவின் மற்றுமொரு இணைத்தலைவரான வடமாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன்,சிவஞானம் சிறீதரன்,ஏம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ள கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்திருந்தது.No comments