சத்தியமூர்த்திக்கு சத்திய சோதனை!

 


வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் இன்று நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக புதிய கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே மத்தியில் உள்ள ஒருவர் மாகாண விடயங்களை கையாளுவது என்பது மாகாண சபை முறைமையை நலிவுற செய்யும் விடயம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சத்தியமூர்த்தி; மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் உள்ளார்.பணிப்பாளர் பதவியை துறந்து விட்டு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் பதவினை பெறுவதாயின்   எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர் மத்திய அரசின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் பணிப்பாளராக கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியையும் பொறுப்பேற்று இருப்பது என்பது எமது மாகாண சபையின் முறைமையினை நலிவுறசெய்யும்  எனவும் தவராசா தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாகாண சபை அதிகாரத்தினை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாட்டை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ன வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்

மாகாண சபைக்குள்ள அதிகாரங்களுக்குட்பட்ட நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள்  ஆகியவற்றுக்கான நியமனங்கள்  மாகாண நிர்வாகத்திற்குட்பட்டவை. அப்படி இருக்கும்போது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற யாழ்ப்பாண போதனா  வைத்திய சாலையின் பணிப்பாளரான செயற்படும் ஒருவரை மாகாண சுகாதார பணிப்பாளராக நியமிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல .மாகாண சபை அதிகாரத்தினை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாட்டை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


No comments