கதிரையினை காப்பாற்ற பில்லி சூனியம்?



வடக்கு மாகாணசபையின் முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தனது கதிரையினை தக்கவைக்க சூனியத்தில் ஈடுபட்டாராவென்ற கேள்வி வடமாகாணசபை அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தங்கி இருந்த நிலையில்இல்லத்தில் இருந்து மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உரிய முறையில் அழிக்கப்பட்டதாக ஆளுநர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸ் அவர்கள் எதிர்வரும் வாரம் பதவியேற்க உள்ள நிலையில் வாசஸ்தலத்தினை தூய்மையாக்கும் பணி செயலக ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள அறைகளில் போத்தல்களில் அடைக்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட பொருட்கள் காணப்பட்டதை அவதானித்த ஊழியர்கள் விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து அதிகாரிகள் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை விடயம் தொடர்பில் வினவிய போது அவை மந்திரிக்கப்பட்ட பொருட்கள் எனவும் அவற்றினை நிலத்தில் கிடங்குவெட்டி புதைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அதனையடுத்து ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு இந்து மத குரு ஒருவர் வரவழைக்கப்பட்டு மந்திரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் அகற்றப்பட்டு நிலத்தில் கிடங்கு வெட்டி புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.


No comments