யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்


வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம ஆடி பெருவிழாவிற்கு யாழ்ப்பாணம் செல்வா சந்நிதி ஆலயத்தில் இருந்து , பாத யாத்திரை இன்றைய தினம் சனிக்கிழமைஜெயா வேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமாகியுள்ளது. 

செல்வச் சந்நிதி ஆலயத்தில் காலை நடைபெற்ற  விசேட பூசையினைத் தொடர்ந்து மோகன் சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாத யாத்திரைக் குழுத் தலைவர்  ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டு, பாத யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்ககளில் உள்ள, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய  7மாவட்டங்களில் உள்ள 98ஆலயங்களைத் தரிசித்து, 46நாட்களில் , 815கிலோமீற்றர் தூரத்தை கடந்தது கதிர்காம ஆலயத்திற்கு இந்த பாதயாத்திரை சென்றடையும். 

இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக இந்த பாத யாத்திரை கருதப்படுகின்றது.

No comments