முன்னாள் ஸ்கொட்லாந்து முதலமைச்சரின் கணவர் கைது!


ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜனின் கணவர் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் நிதி தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதான பீட்டர் முரெல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட பின்னர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் பல முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

முர்ரெல் கடந்த மாதம் கட்சியின் தலைமை நிர்வாகி பதவிலிருந்து பதவி விலகினார்.  1999 முதல் அவர் அப்பதவியில் தொடர்ந்திருந்தார். 

அவர் 2010 முதல் திருமதி ஸ்டர்ஜனைத் திருமணம் செய்து கொண்டார்.

No comments