கெளதாரிமுனை காணி யாருக்கு?



பூநகரி கௌதாரிமுனையில் கடற்தொழில் அமைச்சரின் ஆதரவு பெற்ற தனியார்  நிறுவனங்களிற்காக அரச காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது.

சுமார் 200 ஏக்கர் காணியினை அமைச்சரின் ஆதரவு பெற்ற நிறுவனங்களான கனிரா சீ பூட் மற்றும் நோர்த் சீ பூட் பார்ம் ஆகிய நிறுவனங்கள் இறால் பண்ணை அமைப்பதற்காக காணிகள் அளவை செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இரு தனியார் நிறுவனங்களும் சுமார் நூறு ஏக்கர் காணிகளை 99வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பெற்று இறால் பண்ணைகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பூநகரியின் பரமன்கிராய் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் இறால் பண்ணைக்கென வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக 200 ஏக்கர் காணியினை அமைச்சரின் ஆதரவு பெற்ற நிறுவனங்களிற்கு வழங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியே தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக இறால் பண்ணைகளிற்கான அடிக்கல்லும் அமைச்சரால் நாட்டப்பட்டுள்ள நிலையில் நில அளவீட்டுப்பணிகள் மக்களது நேற்றைய தினமான செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தினால் கைவிடப்பட்டுள்ளது.

முன்னதாக கிராமிய அமைப்பின் பிரதிநிதிகளை பூநகரி பிரதேச செயலகத்திற்கு அழைத்து சமரசம் செய்ய முன்னெடுக்கப்பட்ட முயற்சி வெற்றி பெற்றிருக்கவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளது.

பூநகரி கௌதாரிமுனைப்பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தின் பாரிய நிதி முதலீட்டில் காற்றாலை மின் உற்பத்தி மையங்கள் நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments