சூடானில் தூதரக இராஜதந்திரிகள் வெளியேற்றம்!


சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இருந்து தங்களது தூதரக ஊழியர்களை மீட்கும் பணிகளைத் அமெரிக்க அதிகாரிகள் குழு தொடங்கியது.

இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது.

ரமலான் போர் நிறுத்தத்தை பயன்படுத்தி அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களை தாயகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அந்நாட்டு விமானப் படைகள் 6 விமானகளில் பத்திரமாக வெளியேற்றியதாக சூடான் துணை இராணுவ படை தெரிவித்துள்ளது. 

No comments