யேர்மனியில் சாலையில் கையை ஒட்டிப் போராடும் காலநிலை ஆர்வலர்கள்

 


யேர்மனியில் காலநிலை ஆர்வலர்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை இன்று திங்கட்கிழமை நடத்தியுள்ளனர்.

இப்போராட்டத்தின் போது தலைநகர் பேர்லினில் காலநிலை ஆர்வலர் ஒருவர் தனது கையை சாலையில் ஒட்டவைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒலிப் அல்லது சூரியகாந்தி எண்ணெய்யைப் பயன்படுத்தி கரைக்க முடியாத ஒரு சிறப்பு சூப்பர் க்ளூவைப் பயன்படுத்திய அவர் தனது கையை சாலையில் ஒட்டியிருந்தார்.

அந்த நபரை சாலையிலிருந்து விடுவிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக துளையிடும் ரில்லர் கருவியைப் பயன்படுத்தி அவரது கையை தார் துண்டுடன் மீட்டு எடுத்துச் சென்றுள்னர்.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக இன்னும் கடுமையான அரசாங்க நடவடிக்கையைக் கோரி, 'லாஸ்ட் ஜெனரேஷன்' குழுவைச் சேர்ந்த ஆர்வலர்கள் ஜெர்மனியில் அடிக்கடி சாலைகளை மறித்து போராட்டத்தை நடத்தி வருவது நினைவூட்டத்தக்கது. 

கடந்த வெள்ளிக்கிழமை பேர்லின் சாலையில் போக்குவரத்தைத் தடை செய்யப் போவதாக எச்சரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதனையொட்டி 500 காவல்துறையினர் வீதிகளில் நிறுத்தப்பட்டனர்.

2030க்குள் யேர்மனி அனைத்து புதைபடிவ எரிபொருட்களையும் பயன்படுத்துவதைத் நிறுத்த வேண்டும் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட குறுகிய கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த தலைமுறை விரும்புகிறது.

போக்குவரத்து உமிழ்வைக் குறைப்பதற்கான ஒரு வழியாக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் (62mph) என்ற பொது வேக வரம்பை விதிப்பதும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக அடங்கும்.

No comments