ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பேர்லினில் அனைத்து விமானங்களும் இரத்து!!


யேர்மனி தலைநகரில் அமைந்துள்ள பிராண்டன்பேர்க் விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சோதனைச் சாவடி ஊழியர்களின் ஊதியம தொடர்பான வேலை நிறுத்தத்தால்  இன்று திங்கட்கிழமை விமான நிலயத்தின் அனைத்து புறப்பாடுகளும் இரத்து செய்யப்பட்டன.

பொதுத்துறை தொழிற்சங்கமான Ver.di இரவு மற்றும் விடுமுறை நேரங்களில் வேலை செய்வதற்கான ஊதியம் மற்றும் கூடுதல் நேரத்திற்கான சிறந்த ஊதியம் கோரி வெளிநடப்பு செய்ய அழைப்பு விடுத்ததை அடுத்து சுமார் 240 விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

திங்கள்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு நிறுத்தங்கள் தொடங்கி செவ்வாய் அதிகாலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மன் பொதுத்துறையில் உள்ள அனைத்து 2.5 மில்லியன் ஊழியர்களுக்கும் Ver.di மற்றும் முதலாளிகள் சங்கம் இடையே சனிக்கிழமை உடன்பாடு எட்டப்பட்ட போதிலும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

No comments