மன்னர் சார்லஸ் III இன் முடியாட்சியைக் குறிக்கும் புதிய சீருடைகள் அறிமுகம்

மன்னர் 3ஆம் சார்லஸின் முடியாட்சியைக் குறிக்கும் புதிய சீருடை

டவர் ஒவ் லண்டனில் காவலர்களான பீஃபீட்டர்ஸ் (Beefeaters) மன்னர் மூன்றாம் சார்லஸின் இலச்சினையைக் குறிக்கும் புதிய சீருடைகளை அணிந்துள்ளனர்.

முடியாட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில் புதிய சீருடையை அணிந்து பொதுமக்களின் கவனத்திற்குகொண்டு வந்துள்ளனர்.

இக் காவலர்கள் 1570 ஆம் ஆண்டு முதல் எலிசபெத் I அரியணையில் இருந்தபோது முதலெழுத்துக்களை தங்கள் மார்பில் அணிந்திருந்தனர்.

தற்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் முறைப்படி பதவயேற்பு விழா நடைபெறவுள்ளதால் மன்னர் ஆட்சியைக் குறிக்கும் வகையில் மன்னரின் பெயரை குறிக்கும் புதிய இலட்சினைகளை உள்ளடக்கிய புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது சிவப்பு நிறத்தில் பெரிய அரச கிரீடம் மற்றும் சார்லஸின் நினைவாக CIIIR என்று இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது.

மகாராணி 2ஆம் எலிபெத்தின் முடியாட்சியைக் குறிக்கும் சீருடை

No comments