ஐரோப்பிய நாடுகள் வட கடலை காற்றாலை மையமாக மாற்றும் பிரகடனத்தில் கையெழுத்திட்டன


ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று திங்களன்று பெல்ஜியத்தில் ஒரு உச்சிமாநாட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது வட கடலில் கடலோர காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவதை விரைவுபடுத்துகிறது.

கடலோர காற்றாலை மின் உற்பத்தியை 2030க்குள் 120 ஜிகாவாட்டாகவும் (GW) 2050க்குள் குறைந்தபட்சம் 300 GW ஆகவும் உயர்த்துவதே கூட்டு இலக்காகும்.

சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) நிர்வாக இயக்குனர் Fatih Birol, வட கடலில் கடல் காற்றின் அடிப்படையில் நாம் கொண்டிருக்கும் சாத்தியம் மிகப்பெரியது என்று கூறினார்.

இது உலகின் சிறந்த தரமான கடல் காற்று. மேலும் தற்போதைய ஐரோப்பாவின் மின்சாரத் தேவையை ஆறு மடங்கு அதிகரிக்க நம்மிடம் உள்ள ஆற்றலின் அளவு போதுமானது. அங்கு ஒரு பெரிய ஆற்றல் உள்ளது என பிரோல் மேலும் கூறினார்.

யேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க், டென்மார்க், நோர்வே, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களும் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.

No comments