மற்றொரு அணு ஆயுத தாக்குதல் ட்ரோனை சோதித்தது வடகொரியா


கடலுக்கடியில் அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்குதல் நிகழ்த்தக்கூடிய டிரோனை மீண்டும் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.

ஹெய்ல்-2 (சுனாமி 2)  என பெயரிடப்பட்டுள்ள இந்த டிரோனை, ஆயிரம் கிலோமீட்டர்  (651 மைல்) அப்பால் கடலுக்கடியில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தி இலக்கை தாக்கி அழித்தாக வடகொரியா அறிவித்துள்ளது. 

கொரிய மொழியில் சுனாமி என்பதை குறிக்கும் விதமாக ஹெய்ல் என பெயரிடப்பட்டுள்ள இந்த டிரோன், எதிரி நாட்டு நீர் மூழ்கி கப்பல்களை எதிர்பாரத நேரத்தில் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments