பென்டகனின் இரகசிய ஆவணக் கசிவு: ஜாக் டெக்சீரா மீது குற்றச்சாட்டு!


உக்ரைனில் நடைபெறும் போர் தொடர்பான இரகசிய ஆவணங்களையும் புலனாய்வுத் தகவல்களையும்  கசிய விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க விமானப்படை அதிகாரியான ஜாக் டெக்சீரா நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவரது குடும்ப வீட்டில் கைது செய்யப்பட்டார். 

21 வயதான ஜாக் டெக்சீரா நேற்று வெள்ளிக்கிழமை பொஸ்டனில் உள்ள பெடரல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற அறையில் ஒரு நகர் ''லவ் யூ ஜாக்'' என்ற கூச்சலை எழுப்பிய பின்னர் நீங்களும் அப்பா என்று கூறினார்.

பாதுகாப்புத் தகவல்களை அனுமதியின்றிப் பரப்பிய குற்றச்சாட்டில் திரு டெக்சீரா 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.

இரகசிய ஆவணங்களை அனுமதியின்றி அகற்றியது. மற்றும் அந்த ஆவணங்களை வைத்திருந்தது எனக் இரண்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதலாவது குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனைவும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

கசிந்த இரகசிய ஆவணங்களில் டஜன் கணக்கான உக்ரைனில் நடந்த போர் பற்றிய அமெரிக்க மதிப்பீடுகளையும், அமெரிக்க நட்பு நாடுகள் பற்றிய முக்கியமான இரகசியங்களையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த கசிவுகள் வாஷிங்டனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது மற்றும் இரகசிய தகவல்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியது.

No comments