நல்லூரில் சிறப்பு ஏற்பாடு

 


இந்திய அரசிற்கெதிராக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம் புதன்கிழமை  நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின்  நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

அன்னை ஈகைச் சாவினைத் தழுவிக்கொண்ட நேரமான 8.45 முதல் தியாகத்தாயின் திரு உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறும். இவ் நினைவேந்தலில் ஈகைச்சுடரினை தியாகத்தாய் அன்னை பூபதியின் பேத்தி ஏற்றிவைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின்இறுதி வார நினைவேந்தல் யாழ்.பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டுள்ளது.

அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் உள்ளிட்ட தமிழர் வாழும் தேசம் எங்கும் இவ்வருடம் நினைவேந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments