திருமலை முற்றுமாக எழுதிக்கொடுத்தாயிற்றுவிடுதலைப்புலிகள் அற்ற இலங்கை தற்போது  சர்வதேசத்தின் அப்பம் பறிகொடுத்த கதையாகிவருகின்றது.

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அந்த விஜயத்தின் போது இது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலையில் அமைக்க லங்கா ஐஓசி (LIOC ) நிறுவனத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments