இராமேஸ்வரத்திற்கும் கப்பலில் போகலாம்!



 ராமேசுவரம் - தலைமன்னார் (28 km), ராமேசுவரம்-- காங்கேசன்துறை (100கிமீ) ஆகிய இரு சேவைகளையும் தொடங்க அனுமதி கிடைத்துள்ளதாகவும் நேற்று தமிழ்நாட்டின் சட்டமன்ற அவைக்கூட்டத்தில் மாநிலத்தின் அமைச்சர்  தெரிவித்தார். ராமேசுவரத்தில் பயணருகளுக்கு வசதியான ஜெட்டி, குடிவரவு/அகல்வு நிலையம், சுங்கம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் தொடங்கவுளதாகவும் படகு சேவைகளைப் பெற கேள்வி கோரப்படவுளதாகவும் தெரிவித்தார். இவை எல்லாம் முற்றுப் பெற பல மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

காங்கேசன்துறை துறைமுகம்- காரைக்கால் துறைமுகம் இடையே எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி திட்டமிட்டபடி படகுச் சேவை தொடங்கும். இதற்கான முனைய கட்டம் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது என்று Indsri Ferry Service Pvt Ltd இன் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன்  தெரிவித்தார். 

இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள், பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்பத்தில், படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு பயணத்திற்கு 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த படகுப் பயணமானது 04 மணித்தியால பயண நேரம் என்பதுடன்  பயணி ஒருவர் 100 kg பொதி  வரை கொண்டு செல்ல முடியும் இதற்கான ஒருவழிக்கட்டணமாக - 50 அமெரிக்க டொலர் அறவிடப்படம் 

No comments