ரஷ்யாவின் எதிர்க்கட்சி ஆதரவாளருக்கு 25 ஆண்டுகள் சிறை!!


தேசத்துரோகம் மற்றும் ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டின் கீழ் ரஷ்ய அதிபர் புடினின் அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சி ஆர்வலர் விளாடிமிர் காரா முர்சாவுக்கு  25 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கியள்ளது மொஸ்கோ நீதிமன்றம்.

எதிர்க்கட்சி ஆர்வலர் விளாடிமிர் காரா முர்சா விளாடிமிர் புடினையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பவர் மேற்கத்தை நாடுகளின் முகவர் என்ற அழைக்கப்பட்டார். இவருக்கு இரு முறை நஞ்சூட்டப்பட்டு உயிர் தப்பியவர். இதற்கு அவர் கிரெம்ளினை குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த ஒருவருடங்களாக சிறையில் இருக்கின்றார். அவர் தனது மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார் மற்றும் அவருக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகளை சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின் போது நடந்த விசாரணைக்கு ஒப்பிட்டார்.

காரா-முர்சா மீதான குற்றச்சாட்டுகள் மார்ச் 15 அன்று அரிசோனா பிரதிநிதிகள் சபையில் அவர் உக்ரேனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்ததில் இருந்து அவருக்கு பிரச்சினைகள் எழுந்தது.

அவர் காவலில் இருந்தபோது புலனாய்வாளர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சேர்த்தனர்.

பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்பிய சிறிது நேரத்திலேயே, ரஷ்யா தனது இராணுவத்தைப் பற்றிய "தவறான தகவல்களை" பரப்புவதைக் குற்றமாக்கும் சட்டத்தை கொண்டுவந்தது.

கிரெம்ளின் "ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று அழைக்கும் விமர்சனங்களைத் தடுக்க அதிகாரிகள் சட்டத்தைப் பயன்படுத்தினர்.

மாஸ்கோ நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசாங்கம் மற்றும் சர்வதேச அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. 

பெலாரஷ்ய அரசியல் ஆர்வலர் ஸ்வியட்லானா சிகானுஸ்காயா இந்த முடிவை தனது வெறுப்பை ட்வீட் செய்தார். காரா முர்சா "புடினின் மனிதாபிமானமற்ற ஆட்சியை எதிர்க்கும் ஒரு துணிச்சலான மற்றும் புத்திசாலித்தனமானவர் என்று பதிவிட்டார்.

ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் லின் ட்ரேசி, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யாவிற்கான பிரிட்டிஷ் மற்றும் கனேடிய தூதுவர்களுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய லின், அரசாங்க நடவடிக்கை மீதான விமர்சனத்தை குற்றமாக்குவது பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல என்றார்.



No comments