சூடான் இராணுவத் தரப்பினரிடையே மோதல் 185 பேர் பலி!! 1800 பேர் காயம்!!

இடம் - துணை இராணுவக் குழுத் தலைவர் ஜெனரல் ஹம்தான் டகாலோ: வலம் - இராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான்

ஆபிரிக்க நாடான சூடானில் மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் மோதலில் 185 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற அதிகாரப் போட்டியில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்கும் இடையில் இந்த மோதல் நிலவிவருகிறது. 

அதிகாரத்தில் இருந்த இராணுவத் தலைவரான ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானுக்கும் துணைத் தலைவராக இருந்த துணை இராணுவக் குழுவின் தலைவரான ஜெனரல் ஹெமெட்டி என்றும் அழைக்கப்படும் ஜெனரல் ஹம்தான் டகாலோ ஆகியோருக்கு இடையேயான அதிகாரப் போட்டியே மோதல்கள் காரணமாக அமைகின்றது.

இந்த மோதலைத் தொடர்ந்து இராணுவத் தலைவர் துணை இராணுவப் படையை கிளர்ச்சியார்ளர்கள் என்று அழைக்கிறார். இதேநேரம் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் துணை இராணுவக் குழுவை வாக்னர் குழு இயக்குவதாக செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

சூடானில் அமைதியை நிலை நாட்ட அனைவரும் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் குட்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு இராணுவப் பிரிவினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments