சீறுகிறார் சிவசேனை மறவன்புலோ!
கண்ணுக்குக் கண் என்றார்கள்.பல்லுக்குப் பல் என்றார்கள்.நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுங்கள். அங்கியை ஒருவர் கேட்டால் மேலங்கியையும் அவருக்குக் கொடுங்கள்.இந்தச் செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லுங்கள், என் சீடர்களே என்றார் இயேசு பிரான்.

கண்ணுக்குக் கண்ணை எடு. பல்லுக்குப் பல்லை எடு. ஒரு கன்னத்தில் மறைந்தால் அவன் கன்னத்தில் திருப்பி அறை. மதமாற்றிகளின் சபைகள் சொல்லும் செய்திகள் இவை. இயேசுவின் பெயரால் சொல்லும் செய்திகள் இவையென தெரிவித்துள்ளார் மறவன்புலோ சச்சிதானந்தன்.அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் முந்தையநாள் கோப்பாயில் சிறுமிகள் மீது பாலியல் வன்முறை. பாதிரி கைது. நேற்று அச்சுவேலியில் அடுத்த வீட்டு அணங்கின் தலையில் கல் வீசிக் கடுங் காயம். பாதிரி கைது.

இன்று உதயன் ஊடக அறைக்குள் புகுந்தது பாதிரி தலைமையில் காட்டேரிக் கூட்டம் காவாலிக் கூட்டம் காட்டுமிராண்டிக் கூட்டம். மதமாற்றச் சபை என்ற போர்வையில் வன்முறையைத் தூண்டும் கூட்டம். சைவ மக்கள் ஒவ்வொருவரும் சிவ சேனையாக மாறி உள்ளனர். 

மதமாற்றிச் சபை அலுவலகங்களைக் காவல்துறை இழுத்து மூட வேண்டும். 

வன்முறையைத் தூண்டுவோரை, சட்டங்களை அப்பட்டமாக மீறுவோரைத் தளையிட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.வடமாகணத்தில் அரசு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.சைவ மக்களின் வேண்டுகோள் இதுவேயென தெரிவித்துள்ளார் மறவன்புலோ சச்சிதானந்தன்.

No comments