சீன மரபணு மாற்ற கடலட்டைகள்:சீறும் மணியம்!மரபணு மாற்றப்பட்ட கடலட்டைகள் வடக்கு கடற்பரப்பில் சீன தரப்பினால் திட்டமிட்டு விநியோகிக்கப்படுகின்றது.அவை எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்ட 17வகையான கடலட்டைகளை அழித்துவருகின்றன.ஒரு கட்டத்தில் எமது கடலில் பாரம்பரிய கடலட்டை இனம் இல்லாமல் போய்விடும்.அதன் பின்னர் எமது மீனவருக்கு கடலில் மீன்பிடி தொழிலுமின்றி கடலட்டை பண்ணைகளுமின்றி போய்விடும்.இதற்கெல்லாம் காரணமாக அரசிற்கு முண்டுகொடுத்துவரும் தமிழ் அமைச்சர் ஒருவர் இருப்பதே காரணமென தெரிவித்துள்ளார் வடமாகாண மீனவ இணைய தலைவர் சுப்பிரமணியம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் உண்மையில் மாறி மாறி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிணையாளிகளாக மாறி தமிழ் மக்களிற்கு துரோககங்களையே எமது அரசியல் தலைவர்கள் செய்துவருகின்றார்கள்.

2002ம் ஆண்டில் பேச்சுக்களிற்கு சென்று எம்மை நாமே பலவீனப்படுத்திக்கொண்டோம்.பின்னராக நல்லாட்சி காலத்தில் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்ற போராடினார்கள்.ஆனால் தமிழ் மக்களிற்கு எதுவே கிட்டவேயில்லை.

தற்போது டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் காப்பாற்ற போராடுகின்றார்கள்.ஆனால் இப்போது புது புதிதாக விகாரைகளும்,சிங்கள குடியேற்றங்களுமே தமிழ் மக்களி;ற்கு கிட்டிவருகின்றது.மிஞ்சியிருந்த வடக்கு கடலும் தற்போது தாரை வார்க்கப்படுகின்றது.

கடற்றொழில் அமைச்சராக தமிழர் ஒருவரை வைத்துக்கொண்டு தமிழ் மக்களது காண்களை ரணில் விக்கிரமசிங்க குத்திக்கொண்டிருக்கிறார் எனவும் சுப்பிரமணியம் தெரிவித்தார்.


No comments