இலங்கை காவல்துறைக்கும் காசு கஸ்டம்! சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முன்பணத்தை பொலிஸ் பரிசோதகர் மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்திலான அதிகாரிகளுக்கு வழங்காமல் இருக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் மட்டுமே பண்டிகை முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட பொலிஸ் திணைக்களத்தின் ஏறக்குறைய 7,000 உயர் அதிகாரிகள் மிகவும் கவலையடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து உயர் அதிகாரிகளின் பெயர்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு முன்பணம் வைத்திருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுக்கு நேற்று (6) முதல் பணம் வழங்கப்படும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments