இலங்கை குரங்கொன்றிற்கு 50 ஆயிரம் !



பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் குரங்குகளின் தொல்லையை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட விவசாயிகள் அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.

சீனாவின் உயிரியல் பூங்காக்களுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கோரிக்கையை சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் பல்வேறு நபர்களும் விமர்சித்திருந்தாலும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை என விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

குரங்குகள் மற்றும் பிற விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் சேதம் மிகப்பெரியது என குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்படும் குரங்கொன்றிற்கு சீனா 50 ஆயிரம் இலங்கை ரூபாயை செலவிட உள்ள நிலையில், அவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த 1 லட்சம் ரூபாய் வரையில் விற்க வேண்டி இருக்கும்.

ஆனால் 1 லட்ச ரூபாய் செலவழித்து குரங்குக் கறி சாப்பிட சீனர்கள் முன்வர மாட்டார்கள் என்பதால் அவை உயிரியல் பூங்காக்களுக்குத் தான் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

No comments