சட்டத்தரணிகள்,மதகுருமார் நீதிமன்றில்!பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் தமிழ் பிரதேசங்களில் கடை அடைப்பிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ் கட்சிகளுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் இன்று (17) நடந்த கலந்துரையாடலில் கடை அடைப்பு தொடர்பிலான தீர்மானம் எட்டப்படடுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சி,தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்,தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி ,ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளது. இதனால், அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்   தெரிவித்துள்ளார்;.

No comments