யாழில். பகலில் மோட்டார் சைக்கிளில் நோட்டம் பார்த்து இரவில் மாடுகளை திருடிய கும்பலில் இருவர் கைது


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர்  கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை இந்த திருட்டுக் கும்பலிடம் இறைச்சியை வாங்கி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும்,மேலும் நால்வர் தேடப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 24, 26 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர், வட்டுக்கோட்டை, அளவெட்டி, தெல்லிப்பழை, வடமராட்சி உள்ளிட்ட பிரதேசங்களில் 25 இற்கும் மேற்பட்ட மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 பேர் கொண்ட கும்பல், பகலில் மோட்டார் சைக்கிளில் சென்று மாடுகளை நோட்டுமிட்டு வந்து இரவில் வாகனத்தில் சென்று இரும்புச் சங்கிலி போட்டு மாடுகளை ஏற்றி வந்து, புத்தூர் கப்பூது வெளியில் வைத்து இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளது.

இறைச்சியடிக்கப்பட்ட மாடுகளின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

 திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம், இரும்புச் சங்கிலி மற்றும் ஒரு வாள் என்பன சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்

No comments