25ஆம் திகதி கடையடைப்புக்கு 7 தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இவ் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ் ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா, டெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
Post a Comment