யாழில். வாகன திருத்தகம் மீது குண்டு வீச்சு
வாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு வீசியுள்ளனர். 

குறித்த வெடி குண்டு வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்துள்ளது. அதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

குறித்த வெடி குண்டு உள்ளூர் தயாரிப்பாக இருக்கலாம் என்றும் , அது பெரியளவிலான சேதங்களை விளைவிக்க கூடியவாறு காணப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments