யேர்மனியில் மகிழுந்தை மோதித்தள்ளியது தொடருந்து: மூவர் பலி!


வடக்கு யேர்மனியில் உள்ள கனோவர் நகருக்கு அருகில் தொடருந்தும் மகிழுந்தும் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில்  ஏ6 நெடுஞ்சாலைக்கு அருகில் நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க்கிற்கு வடக்கே ஒரு லெவல் கிராஸிங்கில் (Neustadt am Rübenberg) நடந்துள்ளது.

வேகமாக வந்த தொடருந்து தொடருந்துக் கடவையில் மகிழுந்தை மோதித்தள்ளியது. மகிழுந்தில் இருந்த மூவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 22  வயதுடைய ஓட்டுநர் மற்றும் 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடருந்தில் அந்த நேரம் 38 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் இருந்தாாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தால் பல தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டால் பாதிப்படைந்தன.

No comments