இயேசுவைக் காண பட்டினிச் சாவு: கென்யாவில் 47 சடலங்கள் மீட்பு: மதபோதகர் கைது!


கென்யாவில், கடவுளைக் காண்பதற்காக நடுக்காட்டில் சுயவிருப்பத்தின் பேரில் பட்டினி கிடந்து உயிரிழந்த மேலும் 26 பேரின் உடல்களை கென்ய காவல்துறையினர் மீட்டு உள்ளனர்.

பட்டினியால் இறப்பதன் மூலம் சொர்க்கத்தை அடையலாம் என்ற கொள்கைளை பிரசாரம் செய்து Good News International Church (நல்ல செய்தி சர்வதேச தேவாலயம்) என்ற பெயரில் அமைப்பு நடத்திவந்த மகென்சி என்தெங்கே என்ற போதகரை கைதுசெய்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சடலங்கள் கென்யாவின் கடற்கரை நகரமான மாலிண்டி அருகே கடந்த மூன்று நாட்களில் 47 சடலங்களைத் தோண்டி எடுத்துள்ளனர்,

இறந்தவர்களில் குழந்தைகளின் உடல்களும் அடங்கும். தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேவாலயத் தலைவர் பால் மாக்கன்சி நெங்கே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

58 கல்லறைகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கல்லறைகளில் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் - மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்  உடல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இயேசுவைச் சந்திப்பதற்காக" தங்களைப் பட்டினி கிடக்கும்படி சீடர்களிடம் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.


No comments