அதானிக்கு மன்னாரில் எதிர்ப்பு!

 


மன்னாரில் அமைக்கப்படவுள்ள 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில்,

இரண்டாம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைக்க, அதானி குழுமத்திற்கு திட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நேற்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர், பொது அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் ஒன்றுகூடி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.


இதன்போது சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்த நிலையில், தீவுப் பகுதி மக்களிடமும் பல்வேறு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கையெழுத்து பெறப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும், சர்வதேச ரீதியிலும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் மாவட்ட பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியாமல்

நஷ்டத்தை எதிர்நோக்குவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.


இதன்போது மாவட்ட ரீதியாகவும் வடமாகாண ரீதியாகவும் அனைத்து செயற்பாடுகளையும் முடக்கி பாரிய அளவிலான போராட்டம் முன்னெடுப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


No comments