ஏப்ரல் 25ம் திகதி தேர்தல்!உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ம் திகதி நடாத்த பொருத்தமானதாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்மாதம் 28, 29,30,31 மற்றும் ஏப்ரல் 1ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 8ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே புதிய திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்மையில் உயர் நீதிமன்றம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு திறைசேரி உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments