வவுனியா மரணங்கள்:கடன் பிரச்சினையா?

 




இலங்கையில் உச்சமடைந்திருக்கும் பொருளாதார நெருக்கடி மத்தியில் வவுனியா – குட்செட்வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள். இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

வீட்டினுள் குடும்ப தலைவர்,அவரது சிறு வயதான இரு பிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

42 வயதுடைய சிவபாதசுந்தரம் கௌசிகன், வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரது மனைவியான 36 வயதுடைய வரதராயினி, மற்றும் இரு பிள்ளைகளான 9 வயதுடைய மைத்ரா, 3 வயதுடைய கேசரா ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்களை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை முன்னெடுத்துவருகின்றது.

வவுனியாவில் பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ள சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப தலைவர் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் கடன் அழுத்தங்களால் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கூட்டாக தற்கொலை செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையின் வடபுலத்தில் பொருhளாதார மத்தியில் மீண்டும் தற்கொலை மரணமாக சம்பவம் பதிவாகியுள்ளது.


No comments